சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் மர்ஹூம் பீ.எம்.எம்.ஏ.காதர் அவர்களின் நினைவாக, மருதமுனை பெரியநீலாவணை அக்பர் வித்தியாலயத்திற்கு ஒரு தொகைப் புத்தகங்கள் நேற்று (20) அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
இப்புத்தகங்களை, மர்ஹூம் பீ.எம்.எம்.ஏ.காதர் அவர்களின் புதல்வரும் தற்போது சவூதி அரேபியாவில் தொழில் புரிந்து வரும் காதர் சஜீத் வழங்கியிருந்தார்.
அவற்றை பாடசாலைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு அக்பர் வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர், ஊடகவியலாளர் ஏ.ஜீ.சமீம் அவர்கள் புத்தகங்களை பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்தார்.
நிகழ்வில் பாடசாலை அதிபர் ஏ.எச்.அலி அக்பர், பாடசாலை ஸ்தாபகர் அல்-ஹாஜ் வை.எல்.அன்சார் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு, மர்ஹூம் பீ.எம்.எம்.ஏ.காதர் அவர்களின் கல்வி மற்றும் ஊடகத் துறைக்கான சேவைகளை நினைவு கூர்ந்தனர்.
மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்ட இப்புத்தகங்கள், பாடசாலை நூலகத்தின் வளங்களை மேலும் செழுமைப்படுத்தும் என நிகழ்வில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
No comments: