News Just In

6/05/2026 01:00:00 PM

உலக சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு காரைதீவு கடற்கரை சுத்திகரிப்பு நடவடிக்கை!

உலக சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு காரைதீவு கடற்கரை சுத்திகரிப்பு நடவடிக்கை


நூருல் ஹுதா உமர்

உலக சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு, காரைதீவு கடற்கரைப் பகுதிகளின் தூய்மையையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கில் விசேட கடற்கரை சுத்திகரிப்பு நடவடிக்கை அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வு, காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சு. பாஸ்கரன் அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், காரைதீவு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பாடசாலை சுற்றாடல் கழக மாணவர்கள், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்கள், செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், மேலும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை வழங்கினர்.

நிகழ்வின் போது கடற்கரைப் பகுதியில் காணப்பட்ட பிளாஸ்டிக், பொலித்தீன் மற்றும் ஏனைய கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டதுடன், கடற்கரைச் சூழலை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் பேணும் நோக்கில் விரிவான துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கை, சுத்தமான மற்றும் நிலையான சூழலை உருவாக்கும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். மேலும், பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் கருத்து தெரிவித்தவர்கள், சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும் என வலியுறுத்தினர். பொதுமக்கள், கடற்கரை மற்றும் பொது இடங்களில் கழிவுகளை வீசுவதைத் தவிர்த்து, தூய்மையான மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தனர்.


No comments: