News Just In

6/05/2026 01:07:00 PM

சுரேஷ் சலேவிற்கு ஆஸ்கர் விருது வழங்க வேண்டும் – சட்ட மா அதிபர் திணைக்களம்

சுரேஷ் சலேவிற்கு ஆஸ்கர் விருது வழங்க வேண்டும் – சட்ட மா அதிபர் திணைக்களம்


தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவிற்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட வேண்டுமென சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சலே, மருத்துவர்கள் எதிரில் நடிப்பதாக சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் குற்றம் சுமத்தியுள்ளது. சுரேஷ் சலே மனநல மருத்துவர்கள் எதிரில் நாடகம் ஆடி வருகின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுரேஷ் சாலே தொடர்பில் மனநல மருத்துவ நிபுணரின் அறிக்கையை ஏற்க முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சுரேஷ் சலே மருத்துவ நிபுணர்களைக் கண்டதும் அழுது புலம்பி நாடகம் ஆடி வருவதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சலேவின் இந்த நடிப்பிற்கு ஆஸ்கர் விருது வழங்கலாம் என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

8 பயங்கரவாதிகளை தீர்த்துக் கட்டிய சலே இவ்வளவு மென்மையானவரா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறு எனினும் சுரேஷ் சலே கடும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகி உள்ளதாக அவரது சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ நிதிமன்றில் தெரிவித்துள்ளார்

No comments: