News Just In

5/09/2026 06:45:00 AM

தெலங்கானாவில் பள்ளிக்கூடம் கட்ட 800 ஆண்டு சிவன் கோயில் இடிப்பு

தெலங்கானாவில் பள்ளிக்கூடம் கட்ட 800 ஆண்டு சிவன் கோயில்இடிப்பு





தெலங்​கானா மாநிலத்​தில் அரசு பள்​ளிக் கூடம் கட்ட 800 ஆண்டு புராதன சிவன் கோயில் இடிக்​கப்​பட்​டுள்​ளது. இதற்கு பக்​தர்​களிடையே கடும் கண்​டனம் எழுந்​ததை தொடர்ந்​து, இதற்கு காரண​மானவர்​கள் மீது வழக்​குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இடிக்​கப்​பட்ட அதே இடத்​தில் கோயில் கட்​ட முடிவு செய்​யப்​பட்​டுள்ளது.

தெலங்​கானா மாநிலம், வாரங்​கல் மாவட்​டம், கானாப்​பூர் மண்​டலம் அஷோக் நகரில் 800 ஆண்டு பழமை​யான புராதன சிவன் கோயில் இடிக்​கப்​பட்​டு, அந்த இடத்​தில் அரசுப் பள்ளி கட்ட நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டன. கி.பி 1231-ம் ஆண்​டில், காக்​கதீய அரசர்​களால் இந்த சிவன் கோயில் கட்​டப்​பட்​ட​தாக 7 வரிசை கொண்ட தெலுங்கு கல்​வெட்டு மூலம் தெரிய வந்​துள்​ளது. இதனை மத்​திய கலாச்​சா​ரம் மற்​றும் தொல்லியல்​துறை​யினர் தீவிர​மாக கண்​டித்​துள்​ளனர். உடனடி​யாக கோயில் இடிப்​பதை நிறுத்த வேண்​டுமென வாரங்​கல் மாவட்ட ஆட்​சி​யருக்கு உத்​தர​விட்​டுள்​ளனர். இதனிடையே சிவன் கோயில் இடிக்​கப்​படு​வதை அறிந்து ஊர் மக்​கள் ஒன்று கூடி கடுமை​யாக எதிர்த்​தனர்.

இதுகுறித்து வாரங்​கல் வரு​வாய்த் துறை அதி​காரி​கள் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1965-ம் ஆண்டே இந்த இடத்​தில் புராதன சிவன் கோயில் இருப்​பதை தொல்​லியல்துறை அறிந்​தது. ஆனால், அதன் பின்​னர் எவ்​வித நடவடிக்​கைகளும் எடுக்​க​வில்​லை. இதனை தொடர்ந்து ‘யங் இந்​தியா ஒருங்​கிணைப்பு ரெஸிடென்​ஷியல் பள்ளி’ கட்ட 30 ஏக்​கர் நிலம் கையப்​படுத்த, இந்த இடத்​தில் உள்ள முட்​புதர்​கள் அகற்​றப்​பட்​டன.

அப்​போது பாழடைந்த சிவன் கோயில் இருப்​பது தெரிய வந்​தது. ஆனால் கோயில் இடிக்​கப்​பட​வில்​லை. இந்த இடம் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்​த​மானது இல்​லை. இது வரு​வாய்த் துறைக்கு சொந்​த​மானது என தெரி​வித்​தனர். இதனை தொடர்ந்து இக்​கோ​யிலை இடிக்க முயன்​ற​தாக கொடுத்த புகாரின் அடிப்​படை​யில் சிலர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. அதே இடத்​தில் மீண்​டும் சிவன் கோயில் புதுப்​பிக்​கப்​படும் என வாரங்​கல் மாவட்ட ஆட்​சி​யர் தெரி​வித்​துள்​ளார்​. இவ்​வாறு அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

No comments: