News Just In

4/17/2026 02:02:00 PM

சாய்ந்தமருதில் கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி. நௌசாத் அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா

சாய்ந்தமருதில் கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி. நௌசாத் அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு விழா




நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி ஏ.பி. நௌசாத் அவர்களின் சிறப்பான சேவைகளை பாராட்டும் வகையில் சேவை நலன் பாராட்டு விழா ஒன்று இன்று சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு சாய்ந்தமருது முஹம்மதிய்யா கலை மன்றத்தின் ஏற்பாட்டில், அமைப்பின் தலைவர் கலைஞர் ஏ.எல். அலாவுதீனின் நெறிப்படுத்தலில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு சாய்ந்தமருது 17ஆம் கிராம நிலதாரி ஏ.எம். அஜ்ஹர் அவர்கள் தலைமையேற்றார்.

இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற இலங்கை நிர்வாக சேவை அதிகாரியும், பல்வேறு அமைச்சுக்களின் முன்னாள் செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் பிரதம அதிதியாக வும், சாய்ந்தமருது எம்.எஸ். காரியப்பர் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப், அக்கரைப்பற்று கலாசார மத்திய நிலைய பொறுப்பதிகாரி ஐ.எல். றிஸ்வான், அல் மீஸான் பௌண்டஷன் தவிசாளர் நூருல் ஹுதா உமர் ஆகியோர் கௌரவ அதிதி களாகவும், சமூகத்தின் பல்வேறு தரப்பினரும், கலாசார ஆர்வலர்களும், கலைஞர்கள் கலந்து கொண்டு, ஏ.பி. நௌசாத் அவர்கள் சமூக, கலாச்சார மற்றும் நிர்வாக துறைகளில் ஆற்றிய சேவைகளைப் பாராட்டினர்.

மேலும், அவருடைய பணிப்பற்று, ஒழுக்கம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான அர்ப்பணிப்பு குறித்து பேசப்பட்டதுடன், அவருக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்வு சாய்ந்தமருது பகுதியில் சமூக ஒற்றுமையையும் கலாச்சார முன்னேற்றத்தையும் வலுப்படுத்தும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

No comments: