சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மாதாந்த சுகாதார ஒன்றுகூடல் இன்று, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் அலுவலகத்தின் அனைத்து உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு தங்களின் செயற்பாட்டு அனுபவங்கள் மற்றும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
மேலும், மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லாபீர் கலந்து கொண்டு, பாடசாலை மருத்துவ பரிசோதனை (SMI) மற்றும் வர்த்தக நிலையங்களின் சுகாதார பரிசோதனை (Trade Inspection) தொடர்பான செயல்முறைகள், எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடலை முன்னெடுத்தார்.
அத்துடன், மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் கஃபூர் கலந்து கொண்டு முக்கிய உரையாற்றினார். தனது உரையில், 2035ஆம் ஆண்டுக்குள் இலங்கையில் காசநோயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான தேசிய நோக்கு, முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் அதில் சுகாதார பணியாளர்களின் பங்கு குறித்து விரிவாக விளக்கமளித்தார்.
மேலும், கல்முனை பிராந்திய தாய்-சேய் நல வைத்திய அதிகாரி டாக்டர் டேனியல் கலந்து கொண்டு, பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள் தொடர்பான விடயங்களில் விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டார். இறுதியாக, ஊழியர்களின் கருத்துப் பரிமாற்றத்துடன் இம்மாதாந்த ஒன்று கூடல் சிறப்பாக நிறைவு பெற்றது.
No comments: