News Just In

4/19/2026 04:26:00 PM

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு டொல்பின்விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கலாசார விளையாட்டு விழா

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, புதுக்குடியிருப்பு டொல்பின்விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கலாசார விளையாட்டு விழா 


(18.04.2026 – சனிக்கிழமை)டொல்பின்விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் கலாசார விளையாட்டு விழா  மிக விமர்சையாக நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில், அதிதிகள் பாரம்பரிய முறையில் வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து மங்கள விளக்கேற்றல், இறை வணக்கம் மற்றும் கழகக் கீதம்
இடம்பெற்றன. பின்னர் வரவேற்புரை, ஆசியுரை மற்றும் தலைமையுரை ஆகியவைநடைபெற்றன.

மக்களின் உற்சாகமான கரகோஷங்களுக்கு மத்தியில் பல்வேறு கலாசார
விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற
வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெறுமதியான பரிசுகள் அதிதிகளினால்
வழங்கப்பட்டன.

இறுதியாக, அதிதிகளின் நிறைவு உரைகளும் நன்றியுரையும் இடம்பெற்று விழாஇனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்வில் முதன்மை அதிதிகளாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன்
இராசமாணிக்கம், ஞானமுத்து சிறிநேசன், வைத்தியர் இளையதம்பி சிறிநாத்
அவர்களும், சிறப்பு அதிதிகளாக மண்முனை பிரதேச சபைத் தவிசாளர் திரு. கா.
செந்தில்குமார், மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரி அதிபர் திரு. ம.
சோமசூரியம், கிழக்கு மாகாண உள்ளூராட்சித் திணைக்கள மாகாணப் பொறியியலாளர்திரு. சு. சுகிஷன், புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய அதிபர்திரு. அ. குலேந்திரராசா அவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும், மண்முனை பிரதேச சபை உறுப்பினர்களான திரு. வே. சிவப்பிரகாசம்,
திரு. மு. கிருபேந்திரன் அவர்களுடன் ஆலய நிர்வாகிகள், அரச அதிகாரிகள்,
சமூக ஆர்வலர்கள், டொல்பின் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், சமூக மட்டஅமைப்புகளின் பிரதிநிதிகள், ஊர் பிரமுகர்கள், நலன் விரும்பிகள் மற்றும்பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

No comments: