
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது.
செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன
இந்த நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக இன்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
நேற் றைய அகழ்வின் இறுதியில் எந்தவொரு மனித எச்சங்களும் அகழ்ந்தெடுக்கப்படவில்லை என்றும் இன்று காலை 8 மணி முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் சட்டத்தரணி ரனித்தா தெரிவித்துள்ளார்.
No comments: