நூருல் ஹுதா உமர்
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸதீன் அவர்கள் சனிக்கிழமை (28) காலை அன்னமலை பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்து, அதன் அபிவிருத்திப் பணிகள் குறித்து கலந்துரையாடினார்.
அன்னமலை வைத்தியசாலையின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மற்றும் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடிய பணிப்பாளர் வைத்தியசாலையில் நிலவும் நிர்வாகச் சிக்கல்கள், ஆளணி பற்றாக்குறை மற்றும் வளப்பற்றாக்குறை கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது வைத்தியசாலை நிர்வாகத்தினர் மற்றும் அபிவிருத்திக் குழுவினரால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு அவ்விடத்திலேயே உடனடித் தீர்வுகளை வழங்கிய பணிப்பாளர், வைத்தியசாலையின் உட்கட்டுமான மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்த வருடம் நிதியொதுக்கீடு களை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர், அன்னமலை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments: