ஏறாவூர், கல்குடா உள்ளிட்ட முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் கடமையாற்றும் உலமாக்கள், முஅத்தின்கள் மற்றும் ஊழியர்களுக்கான ரமழான் மாத உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
“ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன்” அமைப்பின் ஏற்பாட்டில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் அவர்களின் தலைமையில், ஓட்டமாவடி ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாசல் வளாகங்களில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் “ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன்” தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு உணவுப் பொதிகளை வழங்கிவைத்து உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் சேவையாளர்களை கௌரவித்தார்.
மேலும், அமைப்பின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் (மதனி), உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், உலமாக்கள் மற்றும் பிரதேச சமூக தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
ரமழான் மாதத்தின் ஆன்மீக சிறப்பை முன்னிறுத்தி, சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, பள்ளிவாசல்களில் பணியாற்றும் சேவையாளர்களின் அர்ப்பணிப்பை பாராட்டும் ஒரு கண்ணியமான நிகழ்வாக அமைந்தது.
No comments: