க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை இம்முறை எழுதிய மாணவர்களுக்கான க.பொ.த. உயர் தர (A/L) புதிய வகுப்புகள் எதிர்வரும் மார்ச் 25ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும் என கல்முனை மாநகர சபை தனது ஆன்புல எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களுக்கு கண்டிப்பான அறிவுறுத்தலை விடுத்துள்ளது.
பெற்றோர்கள் மற்றும் பொது நல அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, மாணவர்களின் மனநலம் மற்றும் உடல் ஓய்வு தேவைகளை முன்னிறுத்தி இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தெரிவித்துள்ளார்.
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த உடனேயே, க.பொ.த. உயர் தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்காக சில தனியார் கல்வி நிலையங்கள் போட்டியிடுகின்றன எனப் பெற்ற முறைப்பாடுகள் மாநகர சபைக்கு கிடைத்துள்ளன. இதனால் மாணவர்கள் ஓய்வின்றி கல்விச் சுமைக்கு உள்ளாகின்றனர் என்ற கவலையும் எழுந்துள்ளது.
மேலும், இவ்விடயத்தில் முன்னர் வழங்கப்பட்ட ஆலோசனைகளைப் பொருட்படுத்தாமல் சில கல்வி நிலையங்கள் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது கவலைக்குரிய ஒன்றாகும் என மாநகர சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மார்ச் 25ஆம் திகதிக்கு முன்பாக A/L வகுப்புகளை ஆரம்பிக்கும் கல்வி நிலையங்களின் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் கல்முனை மாநகர சபை அறிவித்துள்ளது.
மாணவர்களின் நலனை முன்னிறுத்தி பெற்றோர்களும் கல்வி நிலையங்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகர சபை கேட்டுக்கொண்டுள்ளது

No comments: