04 Mar 2026 அரபிக் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின் அதிநவீன மற்றும் மிகப்பாரிய ரேடார் கட்டமைப்பை ஏவுகணைகள் மூலம் தகர்த்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. சுமார் 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த AN/FPS-132 ரக ரேடார், 5,000 கிலோமீட்டர் தூரம் வரை உள்ள வான்பரப்பைக் கண்காணிக்கும் திறன் கொண்டது. இதன் மூலம் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
கத்தார் (Qatar) நாட்டில் உள்ள அல்-உடைத் (Al Udeid) விமானப்படைத் தளத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ரேடார் தளம், ஈரானின் 'சாதிக் 4' நடவடிக்கையின் போது துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் அமெரிக்காவின் ஏவுகணை எச்சரிக்கை கட்டமைப்பு பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகத் தெஹ்ரான் டைம்ஸ் (Tehran Times) செய்தி வெளியிட்டுள்ளது.
No comments: