அமெரிக்கா கனடாவின் நண்பன் அல்ல, அது ரஷ்யாவைவிட உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என கனேடியர்கள் கருதுவது சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஆய்வமைப்புகள் இரண்டு இணைந்து, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியிலுள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் அமெரிக்கா குறித்த ஆய்வொன்றை நடத்தின.
நேற்று அந்த ஆய்வுகளின் முடிவுகள் வெளியான நிலையில், 58 சதவிகித கனேடியர்கள், அமெரிக்கா கனடாவின்நண்பன் அல்ல என கருதுவதாக தெரிவித்துள்ளார்கள்.
இதே கருத்து, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் அமெரிக்க மக்களிடையேயும் உள்ளது.
மேலும், 57 சதவிகிதம் பேர், ஆபத்து மற்றும் சவால்கள் எழும் நேரத்தில் அமெரிக்காவை நம்பமுடியாது என்றும் கூறியுள்ளார்கள்.

No comments: