News Just In

2/15/2026 05:54:00 PM

பல வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான பணம்: இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு தங்க பிஸ்கட் - அம்பலமான விடயம்

பல வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான பணம்: இலங்கைக்கு வந்துள்ள பெருமளவு தங்க பிஸ்கட் - அம்பலமான விடயம்




இலங்கையில் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான ரூபா பணத்தை வைத்திருக்கும் தொழிலதிபரொருவர் சட்டவிரோதமாக தங்க பிஸ்கட்களை நாட்டிற்கு கொண்டு வந்த விடயம் குற்றப்புலனாய்வு பிரிவின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அதன்படி குறித்த நபர் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக தங்க பிஸ்கட்களை வாங்கி, இலங்கைக்கு கொண்டு வந்து தங்க நகை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்தமை தெரியவந்துள்ளது.

இந்த நபர் கைது செய்யப்பட்ட பின்னர் குற்றப்புலனாய்வு பிரிவு நடத்திய விசாரணைகளின் போது இந்த தகவல் தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் கமல் ஆரியவன்ச இது குறித்து கூறுகையில், தங்க பிஸ்கட்டுக்களை வாங்க பலர் அவருக்கு பணம் கொடுத்துள்ளனர்.

நீண்ட காலமாக மிகுந்த கவனத்துடன் நடத்தப்பட்ட இந்த மோசடியில் இரண்டு அல்லது மூன்று அரச அதிகாரிகள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மூன்று அல்லது நான்கு வங்கிக் கணக்குகளில் அவருக்கு கோடிக்கணக்கான ரூபா பணம் இருப்பதும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பணத்தை எடுத்து புதிய கணக்குகளைத் திறந்து வருவதும் தெரியவந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

No comments: