நிந்தவூர் Y TWO K முன்பள்ளி பாடசாலையின் 2025ஆம் ஆண்டு வருடாந்த விளையாட்டுப் போட்டி, விடுகை விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள், Y TWO K முன்பள்ளி பாடசாலை முகாமைத்துவ பணிப்பாளரும் Y TWO K நலன்புரி அமைப்பின் தவிசாளரும், நிந்தவூர் பிரதேச செயலகத்தின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தருமான ஏ.எச்.எம்.லாபீர் (ஜேபி) அவர்களின் தலைமையில், நிந்தவூர் கமு/கமு/அல்-பதூரியா வித்தியாலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மழலைகளின் விளையாட்டு நிகழ்வுகள், விநோத உடைகள் அணிந்த அணிவகுப்புகள் மற்றும் கலைத் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றுடன் விழா சிறப்பாக அமைந்திருந்தது.
இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அஷ்ரப் தாஹிர் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். முன்பள்ளிப் பருவத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவச் செல்வங்களுக்கான கௌரவிப்பு நிகழ்வில், நினைவுச் சின்னங்களையும் சான்றிதழ்களையும் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்கள் வழங்கி வைத்தார்.
விழாவில் விசேட அதிதிகளாக சிரேஷ்ட சட்டத்தரணியும் நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல். றியாஸ் ஆதம், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஜெ.எம்.ஜுஸைல், கே.எம்.ஜலீல், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஏ.ஜெ.ஹாரீஸ், கமு/கமு/அல்-பதூரியா வித்தியாலய அதிபர் எம்.ஏ.எம். ஜெஸீர் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை விரிவுரையாளர் எம்.ஏ.எம்.மாஹிர், மாஸ் பவுண்டேஷன் அமைப்பின் வெளிநாட்டு தொடர்பாளர் எஸ்.எம்.ஐ.நபறுல்லாஹ், மகளிர் சமூக சேவை அமைப்பின் தலைவி எம். அனீஸா உள்ளிட்ட பல சிறப்பு அதிதிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்தொகையினர் இந்நிகழ்வில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.
No comments: