News Just In

1/07/2026 06:53:00 PM

யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கஜே ந்திரகுமார் கேட்டதை முண்டியடித்து வந்து பாராளுமன்றில் கத்தி, புலம்பி கேட்ட அர்ச்சுனா எம்.பி!

யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கஜே ந்திரகுமார் கேட்டதை முண்டியடித்து வந்து பாராளுமன்றில் கத்தி, புலம்பி கேட்ட அர்ச்சுனா எம்.பி!



யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அதன்போது, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் ஒரு கருத்தை முன்வைக்கும் போது அதை இடை மறித்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கதைத்திருந்தார்,மீண்டும் மீண்டும் அவர் இடைமறித்தபோது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தூசண வார்த்தைப்பிரயோகங்களை அர்ச்சுனா எம்.பி ஆரம்பித்ததை தொடர்ந்து இருவருக்கும் இடையே வாய்த்தர்கம் ஏற்பட்டது.

அதன்போது, பேசிய பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார், பாரளுமற்றிலும் எனக்கு அருகில் அமர்த்தியுள்ளீர்கள் இங்கும் எனக்கு அருகில் இவரை அமர்த்தியுள்ளீர்கள், எதையும் கதைக்க விடாமல் குழப்புகிறார் இனிவரும் காலங்களில் என்னை இவருடன் சேர்த்து அமர்த்தவேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு பேசிய அரச்சுனா , தனது சிறப்புரிமை குறித்து பேசி தன்னை கஜேந்திரகுமாருக்கு அருகில் இருத்த வேண்டாம் என கோரியிருந்தார். இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் அங்கு இல்லாத நேரம் இவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: