News Just In

1/11/2026 08:24:00 PM

அறுகம்பையில் இயங்கிய இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்திற்கு பூட்டு

அறுகம்பையில் இயங்கிய இஸ்ரேலியர்களின் சபாத் இல்லத்திற்கு பூட்டு



பொத்துவில், அறுகம்பையில் இயங்கி வந்த இஸ்ரேலியர்களின் வணக்க வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக கூறப்படும் சபாத் இல்லம் நேற்று முதல் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டது.

பொத்துவிலைச் சேர்ந்த தமீம் எனப்படுபவர் சுற்றுலா ஹோட்டல் செய்வதற்காக ஒருவருக்கு விற்பனை செய்த இந்த இடத்தை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர் ஒருவர் பெற்று ஹோட்டல் அன்ட் ரெஸ்டாரண்டாக இயக்கி வந்தார்.

அத்துடன் இஸ்ரேலியர்கள் ஒன்று சேரு ம் இடமாகவும் பயன்பாடுத்தி வந்த நிலையில் அங்கு இஸ்ரேலர்களின் வணக்க வழிபாடுகள் இடம்பெற்றும் சபாத் இல்லம் எனப்படும் இந்த இல்லம் குறித்து அண்மைக்காலமாக பல சர்ச்சைகள் எழுந்து வந்தன. சர்வதேச ரீதியாக இந்தப் பிரச்சினை பேசப்பட்டது.

இது தொடர்பாக குறிப்பிட்ட காணியை வழங்கிய தமீம் எனப்படுபவரும் பல்வேறு விமர்சனத்துக்குள்ளாகி வந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் சூட பிடித்து இது பாராளுமன்றில் விவாதிக்கப்பட்டது. நீதிமன்றம் வரையும் சென்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த காணியை விற்பனை செய்த தமீம் என்பவரின் தனிப்பட்ட முயற்சியால் அதிக விலை கொடுத்து மீளப்பெறப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நேற்று குறித்த இடத்தில் காணியின் உரிமையாளர் தமீம் தலைமையில் பால் சோறு வழங்கி துஆ பிரார்த்தனைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



No comments: