
இலங்கை பதிப்பக சங்கம் , வவுனியா பதிப்பகத்தார் கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து புதிய உத்திகளுடன் கூடிய கட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் நோக்குடனான நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது.
வவுனியா கூட்டுறவு சம்மேளன மண்டபத்தில் இ்டம்பெற்ற நிகழ்வில் இலங்கை பதிப்பக சங்கத்தின் செயற்பாடுகள், பிராந்திய ரீதியில் உள்ள பதிப்பகத்தாருக்கான புதிய தொழில்நுட்ப உத்திகள் ,உலக சந்தையில் பதிப்பகத்துக்குள்ள கேள்வி அதனை விரிவுப்படுத்துவதற்கான வழிவகைகள் தொடர்பில் தெளிவுப்படுத்தப்பட்டது.
அத்துடன் வவுனியா மாவட்ட பதிப்பகத்தார் எதிர்க்கொள்ளும் சவால்கள் அவற்றுக்கு காணக்கூடியதான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இந் நிகழ்வில் இலங்கை பதிப்பக சங்கத்தின் தலைவர் ஜனா ரத்ன குமார, உப தலைவர் நிசாந்த பெரேரா, எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளரும் சங்கத்தின் உப தலைவருமான எம். செந்தில் நாதன், சங்கத்தின் உறுப்பினர் தினேஷ் மேர்வின் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

No comments: