
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஆட்சிக்கு வந்ததிலிருந்தே சர்வாதிகாரி போல் நடந்துகொள்கிறார்.
டென்மார்க் ராஜ்யத்தின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பது குறித்து வெளிப்படையாகவே பேசிவருகிறார் அவர்.
ஆக, ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ட்ரம்ப், கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பது நியாயமா என்னும் குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன.
இந்நிலையில், அமெரிக்க படைகள் கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க வந்தால், முதலில் சுடுங்கள், பிறகு விசாரிக்கலாம் என தனது படைகளிடம் டென்மார்க் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ள விடயம், மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது.
ட்ரம்ப் கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க இருப்பதாக கூறிவரும் நிலையில், டென்மார்க் படைவீரர்கள், தங்கள் தளபதிகளின் உத்தரவை எல்லாம் எதிர்பார்த்துக்கொண்டு இருக்காமல், பிரச்சினை ஏற்படும் நிலையில் உடனடியாக பதிலடி கொடுக்கலாம் என டென்மார்க் பாதுகாப்பு அமைச்சகம் தனது படைவீரர்களிடம் கூறியுள்ளது.
நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றிற்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், உடனடியாக அந்த அமைப்பிலுள்ள மற்ற நாடுகள் பாதிக்கப்பட்ட நாட்டுக்கு உதவவேண்டும்.
ஆனால், இப்போது நேட்டோ நாடான அமெரிக்காவே, தனது சக நாடான டென்மார்க்குக்கு சொந்தமான கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க முயல்கிறது
No comments: