பிரதமரை பதவி விலகக்கோரி விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட தீர்மானம் !
புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்தி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சின் முன்பாக திங்கட்கிழமை (12) சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.
தேசியத்துக்கு எதிராக செயற்படும் அரசாங்கத்துக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். புதிய கல்வி கொள்கை மாணவர்களுக்கு அவசியமற்றது. ஆகவே அனைவரும் இந்த சத்தியாகிரக போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும் எனவும் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார்.
புதிய கல்வி கொள்கை தொடர்பில் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரை நேற்று சந்தித்து விடயங்களை முன்வைத்த விமல் வீரவன்ச, அரசாங்கம் நாட்டின் தேசிய கொள்கை மற்றும் கலாசாரத்துக்கு முரணாகவே புதிய கல்வி மறுசீரமைப்பை தயாரித்துள்ளது.
கல்வி மறுசீரமைப்பில் வருடாந்த தவணை பரீட்சை முறைமை நீக்கப்பட்டுள்ளது. இலவச கல்வி திட்டத்தில் தவணை பரீட்சைகளை நீக்கினால் அது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.
6ஆம் தர பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்ட சர்க்சைக்குரிய விடயம் நீக்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிடுகிறார்.ஆனால் அதே புத்தகம் தனியார் கடைகளில் விற்கப்படுகிறது. ஆகவே புதிய கல்வி கொள்யை அரசாங்கம் முழுமையாக நீக்கிக் கொள்ள வேண்டும்.
புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்தி கல்வி அமைச்சின் முன்பாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளேன்' என்றார்.
இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச, சிறந்த அரசியல் கலாசாரத்தை கடைப்பிடிப்பதாக இருந்தால் பிரதமர் உடன் பதவி விலக வேண்டும்.எமது சத்தியாகிரக போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்
1/12/2026 07:16:00 AM
Home
/
Unlabelled
/
பிரதமரை பதவி விலகக்கோரி விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட தீர்மானம் !
பிரதமரை பதவி விலகக்கோரி விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட தீர்மானம் !
Subscribe to:
Post Comments (Atom)
No comments: