News Just In

12/05/2025 07:06:00 PM

குமுகாய மேம்பாட்டு மன்றம் -கிழக்கு(SAFE) அமைப்பினால் சவுக்கடி மக்களுக்கான வெள்ள நிவாரண உதவி!

 சவுக்கடி மக்களுக்கான வெள்ள நிவாரண உதவி!



குமுகாய மேம்பாட்டு மன்றம் -கிழக்கு(SAFE) அமைப்பினால்சவுக்கடி கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமைதாங்கும் 50குடும்பங்களுக்கு 2890/- பெறுமதியான உலர் உணவு பொதிகள்இன்று  (05/12/2025  சவுக்கடி பகுதியில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.

 இந் நிகழ்வில் சமூக சேவகரும் ஆசிரியருமான மனோகரன் சுரேஷ்காந்தன்  அவர்களுடன்  ஏறாவூர் பற்று பிரதேசசபை உறுப்பினர் நமசிவாயம் திவாகர் , சவுக்கடி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் , மாதர் சங்கம், கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் கலந்து கொண்டனர். இதற்கான நிதி உதவியினை வன்னி நிழல்கள் அமைப்பு மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தின்(EDS)ஊடாக வழங்கிஇருந்தது

No comments: