வாழைச்சேனை தவிசாளர் உட்பட நான்கு பேர் தொல்பொருள் பதாகையை அகற்றியது சம்பந்தமான வழக்கில் பிணைவழங்கிய நீதிமன்றம் ! மாநகர முன்னாள் முதல்வர் சரவணபவன்
தொல்பொருள் பதாகையை வாழைச்சேனை தவிசாளர் உட்பட நான்கு பேர் அகற்றியது சம்பந்தமான வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்களும் அவருடன் சட்டத்தரணி விஜயகுமார் அவர்களும் பிரசன்னமாகி பிணையினை பெற்ற னர்.
உள்ளூராட்சி அதிகார சபைகள் கட்டளைச் சட்டத்தின் அதிகாரங்களை மீறி மத்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் திணைக்களங்கள் உள்ளூராட்சி அதிகார சபைகள் கட்டளைச் சட்டத்தின் அனுமதி இன்றி எவ்விதமான பெயர் பலகையும் காட்சிப்படுத்த முடியாது இது இன்றைய தினம் கனம் நீதிமன்றம் பிணைவழங்கிய தீர்ப்பாக அமைந்துள்ளது.
நான் சில நாட்களின் முன்னர் இந்த விடயம் உள்ளூராட்சி அதிகார சபைகள் கட்டளைச் சட்டத்தின் ஊடாக சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரமாகும்.
இதனை மீறிச் செயற்படும் நபர்கள்/ திணைக்களங்கள்/ அதிகார சபைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிச்சயம் உண்டு. என எமது தரப்பு சார்பாக பதிவிட்டிருந்தேன்.
குறித்த வழக்கில் பிரசன்னமாகி சிறந்த வரலாற்றுத் தீர்ப்பினைப் பெற்றுத்தர வழிவகுத்த ஜனாதிபதி சட்டத்தரணி M.A சுமந்திரன் அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன் இந்த வழக்கில் பிரசன்னமான சட்டத்தரணி விஜயகுமார் அவர்களுக்கும் எமது நன்றிகள்.
No comments: