News Just In

11/26/2025 08:37:00 AM

கனடாவிலிருந்து பதிவிடப்பட்ட முகநூல் பதிவு...! சர்ச்சையை கிளப்பு தேரர்

கனடாவிலிருந்து பதிவிடப்பட்ட முகநூல் பதிவு...! சர்ச்சையை கிளப்பு தேரர்




கனடாவில் வசிக்கும் அயூப் ஹஸ்மின் என்பவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டிருந்த ஒரு பதிவு தொடர்பில் கலகொட அத்தே ஞானசார தேரர் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “திருகோணமலை புத்தர் சம்பவத்தை தொடர்ந்து அயூப் ஹஸ்மின் தனது முகநூல் பதிவில், நீங்கள் காத்திருங்கள் புத்தர் சிலையை உடைக்கும் குழு ஒன்று உருவாக்கும் வரை என தெரிவித்திருந்தார்.

யார் இவர் 2006 தொடக்கம் 2007 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ஜமாத்தே இஸ்லாமியின் மாணவர் அணியின் முன்னாள் தலைவர். அஸ்மின் 2013 மாகாண சபைத் தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களில் ஒருவராகப் போட்டியிட்டார்.

இருப்பினும், தேர்ந்தெடுக்கப்படத் தவறிவிட்ட நிலையில், அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரண்டு போனஸ் ஆசனங்கள் மூலம் வடக்கு மாகாண சபைக்கு நியமிக்கப்பட்டார்.

வடக்கு மாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு குறித்து முதலமைச்சருக்கு உதவ அவர் நியமிக்கப்பட்டார்.

இவரின் அணியே அன்று மாவனல்லை புத்தர் சிலையை உடைத்தனர், நல்லாட்சி அரசாங்கத்திலும் நாட்டில் பிரிவினை வாதம் மெதுவாக தலைதூக்கி பாரிய வெறுப்பை வெளிப்படுத்தியது.

அஸ்மின் இலங்கையில் முஸ்லிம் இராச்சியம் உருவாக வேண்டும் என சிந்தனை கொண்டவர்.

தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் தொடர்பில் இருந்தவர், இவர் பிரிவினைவாத புலம்பெயர் தமிழர்களுடன் இணைந்து செயற்படுவதாக தோன்றுகின்றது.

இவர் இப்போது கனடாவில் வசித்து வருகின்றார், இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பு மற்றும் அரசியல் உயர் பீடங்கள் சோதனைகளை மேற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

No comments: