News Just In

11/22/2025 08:14:00 AM

உள்ளூராட்சி சபைகளின் அனுமதி இல்லாமல் அந்த பிரதேசத்தில் ஒரு செங்கல்லைக் கூட நட முடியாது!மட்டக்களப்பு மாநகர முன்னாள் முதல்வர் சரவணபவன்

உள்ளூராட்சி சபைகளின் அனுமதி இல்லாமல் அந்த பிரதேசத்தில் ஒரு செங்கல்லைக் கூட நட முடியாது! மட்டக்களப்புமாநகர முன்னாள்  முதல்வர் சரவணபவன் 


தொல்பொருளாக இருந்தாலும் எந்த திணைக்களமாக இருந்தாலும் உள்ளூராட்சி சபைகளின் அனுமதி இல்லாமல் அந்த பிரதேசத்தில் ஒரு செங்கல்லைக் கூட நட முடியாது.

1. ஒரு திணைக்களம் குறித்த ஒரு பிரதேசத்தில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க அந்த உள்ளூராட்சி சபைகளிடம் ( பிரதேச சபை/ நகர சபை/ மாநகர சபை) அனுமதி எடுக்க வேண்டுமென்பது சட்டமாகும்.
2. அனுமதி எடுக்கும்போதே குறித்த செயற்பாடு தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலை முன்பே பிரசுரித்து. அதனுடன் இணைந்தவாறே அனுமதி விண்ணப்பத்தை உள்ளூராட்சி மன்றங்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்
3. அனுமதி வழங்கும்போது அதனை பொதுசபையில் பிரேரணையாக சமர்ப்பித்து சபை அங்கீகரித்த பின்னரே ஒரு உள்ளூராட்சி சபையால் அனுமதி வழங்க முடியும்.
4. பின்னரே எந்தவொரு பிரதேசத்திலும் தமது சொந்த செயற்பாடுகளைக்கூட செய்ய ஒரு அரச திணைக்களங்களுக்கு அதிகாரம் உண்டு.
இந்த விடயம் உள்ளூராட்சி அதிகார சபைகள் கட்டளைச் சட்டத்தின் ஊடாக சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரமாகும்.
இதனை மீறிச் செயற்படும் நபர்கள்/ திணைக்களங்கள்/ அதிகார சபைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிச்சயம் உண்டு.
அனுமதி_இல்லாமல்_வைக்கப்படும்_எந்த_பதாகையையும்_பிடுங்கி_எறியலாம்
அது தவிசாளர்/ மேயரின் ஆளுமையில் உள்ளது.மேலும் வடகிழக்கில் ஆட்சி மொழி தமிழ் ஆகும் இங்கு காட்சிப்படுத்தப்படும் எந்த ஒரு பதாகையிலும் தமிழுக்கு முதல் இடம் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்க வில்லை எனின் அதனையும் அகற்றும் அதிகாரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உண்டு.

No comments: