நூருல் ஹுதா உமர்
மாளிகாவத்தை இளைஞர் விளையாட்டுக் கழகத்தால் 11வது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட மேல்மாகாண 19 வயதுக்குட்பட்டோர் கால்பந்து போட்டி அக்டோபர் 19 ஆம் திகதி காலை 8 மணிக்கு பொரளை கேம்பல் மைதானத்தில் கழக தலைவர் ஐ.என்.எம். மிப்லால் மௌலவியின் தலைமையில் தொடங்கியது.
இந்த ஆண்டு சாம்பியன்ஷிப்பில் கிண்ணத்தை வெல்ல மேல்மாகாணம் முழுவதிலுமிருந்து 16 புகழ் பெற்ற அணிகள் போட்டியிட்டு அதில் பிரபல 08 கழகங்கள் கால் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது. காலிறுதி சுற்று போட்டி இன்று 23.11.2025 கொழும்பு சித்தீக் மைதானத்தில் சாண்டர்ஸ் விளையாட்டு கழகத்தை எதிர்த்து பீட்டரைட் விளையாட்டு கழகம் மோதியதுடன் தொடங்கியது.
இந்த தொடக்க நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு காலிறுதி போட்டிகளை தொடக்கி வைத்தார். மேலும் அரை இறுதிப்போட்டி இம்மாதம் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதுடன் இறுதிப்போட்டி இம்மாதம் 30 ஆம் திகதி கொழும்பு சுகதாச உள்ளக அரங்கத்தில் நடைபெறவுள்ளது. அன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவில் மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசுப் பிரதம விருந்தினராக கலந்து கொள்வார் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது

No comments: