News Just In

10/05/2025 10:35:00 AM

இளையோரின் ஆற்றல்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் சஞ்சிகை வெளியீடு

இளையோரின் ஆற்றல்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் சஞ்சிகை வெளியீடு
(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

இளைஞர்களின் சிந்தனைகளையும், அறிவாற்றலையும் திறமைகளையும் வெளிக்கொண்டு வரும் விதத்தில் “உயர்வு” எனும் பெயரில் அரையாண்டு சஞ்சிகை ஒன்றை வெளியிடவுள்ளதாக ஏறாவூர் 3ஏ சனசமூக நிலையத்தின் தலைவர் எம்.எஸ்.எம். றூமி தெரிவித்தார்.

இதனூடாக சமூகத்தில் உள்ள பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் ஒரு மேடையாகவும், சமூகத்தில் மாற்றத்தினை உருவாக்கும் தீர்வுத் தளமாகவும்;, சமூக வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு களமாகவும் இந்த சஞ்சிகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்களிடமிருந்து “உயர்வு” சஞ்சிகைக்கான ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமூக, கல்வி சுற்றுச்சூழல், இளைஞர் அபிவிருத்தி, தலைமைத்துவம் தொடர்பான கட்டுரைகள், தீமைகள், தன்னம்பிக்கை, மாற்றம், இயற்கை, சமாதானம் தொடர்பான ஆக்கங்கள், வாழ்வியல் அனுபவம், சமூகத்தில் மாற்றத்தை உருவாக்கிய நிகழ்வுகள் பற்றிய அனுபவக்கதைகள், சிறுகதைகள், மாணவர்களின் சாதனைகள் போன்றவற்றை தங்களது படைப்பாக்கங்களாக வெளிக்கொண்டுவர “உயர்வு” சஞ்சிகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அனைத்து ஆக்கங்களும் சுய ஆக்கங்களாக இருப்பதோடு உண்மையானவையாகவும், பிரத்தியேகமானவையாகவும் தற்கால இளையோரை மாற்றத்திற்குத் தூண்டும் வகையிலும் இருக்க வேண்டும்.

சஞ்சிகைக்கு ஆக்கங்களை அனுப்ப வேண்டிய இறுதித் திகதி: 2025 ஒக்டோபர் 20 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனுப்ப வேண்டிய முகவரி: ஆசிரியர் “உயர்வு” சஞ்சிகை, ஏறாவூர் 3ஏ சனசமூக நிலைய அலுவலகம், பெண் பாடசாலை வீதி, ஏறாவூர்-3ஏ.

No comments: