News Just In

9/24/2025 08:59:00 AM

இணைந்த கரங்கள் அமைப்பினால் ஆசிரியர் பற்றாக்குறையான பாடசாலைகளுக்கு தொண்டர் ஆசிரியர்களை நியமித்து வகுப்புகள் ஆரம்பிப்பு !

இணைந்த கரங்கள் அமைப்பினால் ஆசிரியர் பற்றாக்குறையான பாடசாலைகளுக்கு தொண்டர் ஆசிரியர்களை நியமித்து வகுப்புகள் ஆரம்பிப்பு !

நூருல் ஹுதா உமர்

இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்/மமே/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் சில மாதங்களாக கணித பாடத்தை மாணவர்களுக்கு கற்பிப்பதற்கான ஆசிரியர் இல்லாத காரணத்தினால் வலயக் கல்வி பணிமனை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க ஆசிரியர்களை வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று மட் /மமே/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலய அதிபர் தலைமையில் நடைபெற்றது.

மட்/மமே/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியருக்கான கொடுப்பனவை இணைந்த கரங்கள் உறவுகள் ஊடாக பயணிக்கும் அவுஸ்திரேலிய நகையக உரிமையாளரான திரு. பாக்கியராசா அவர்களால் வழங்கப்படுகின்றது. மேலும் மட்/மமே/ வெலிக்ககண்டி விபுலானந்தா வித்தியாலயம் மற்றும்மட்/மமே/ மாவலையாறு கைலான் வித்தியாலயங்களில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை இணைந்த கரங்கள் உறவுகள் ஊடாக வழங்கி வைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில் இணைந்த கரங்கள் அமைப்பின் பிரதிநிதிகள், பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: