News Just In

9/28/2025 05:54:00 AM

‘அப்பாவி மக்களின் உயிரிழப்பு இதயத்தை நொறுக்குகிறது’ - கரூர் சம்பவத்துக்கு ராஜ்நாத் சிங் இரங்கல்


‘அப்பாவி மக்களின் உயிரிழப்பு இதயத்தை நொறுக்குகிறது’ - கரூர் சம்பவத்துக்கு ராஜ்நாத் சிங் இரங்கல்

கரூரில் விஜய்யின் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் நடந்த பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வேதனையளிக்கிறது. அப்பாவி மக்களின் உயிரிழப்பு இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவாக குணமடைய இறைவனைப் பிரார்த்தனை செய்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments: