எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடிக்கு (Kumara Jayakody) எதிராக குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்ய இலஞ்ச ஊழல் ஆணையம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி முறைகேடு தொடர்பிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
குறித்த விடயத்தை கொழும்பின் (Colombo) ஆங்கில இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு உரக் கூட்டுத்தாபனத்தில் கேள்விப்பத்திர சபையின் தலைவராக பணியாற்றிய போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பிலேயே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதன்போது எட்டு மில்லியன் ரூபாய் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நீதிபதியொருவரை குறித்தும் கருத்து தெரிவித்ததற்காக ஜயகொடியை எதிர்த்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் எதிர்க்கட்சியினர் மற்றும் சிவில் அமைப்புகள் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளன.
இந்த வழக்குகளில் ஏதேனும் ஒன்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஜயகொடி கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எரிசக்தி அமைச்சர் குமாரஜய கொடி பதவி விலக வேண்டும் என சிரேஷ்ட அமைச்சரவை உறுப்பினர்கள் கோரி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், அமைச்சருக்கு நெருக்கமான வட்டாரங்கள் அவர் அவ்வாறு பதவி விலக எந்த திட்டமும் இல்லை என்று தெரிவிக்கின்றன.

No comments: