
ரஷ்யாவிற்குள் 3000 கிலோமீட்டர் தூரம் புகுந்து இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய புதிய பிளமிங்கோ FP-5 குரூஸ் ஏவுகணையை உக்ரைன் அறிமுகப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் எல்லைக்குள் 3000 கிலோமீட்டர் தூரம் சென்று இலக்குகளை துல்லியமாகத் அழிக்கக்கூடிய பிளமிங்கோ FP-5 குரூஸ் என்ற புதிய சக்திவாய்ந்த ஆயுதத்தை உக்ரைன் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த பிளமிங்கோ FP-5 குரூஸ் ஏவுகணையின் முக்கிய சிறப்பம்சமாக அதன் 1,150 கிலோகிராம் எடை கொண்ட வெடிபொருள் சொல்லப்படுகிறது.
ஏவுகணையின் அழிக்கும் திறனை பொறுத்தவரை, இது ரஷ்யாவின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து அழித்த R-360 நெப்டியூன் ஏவுகணையை விட அதிக சக்தி கொண்ட பயங்கர ஆயுதம் என தகவல் கூறப்படுகிறது.
இந்த ஏவுகணையானது, ஃபயர் பாயிண்ட் என்ற உக்ரைனிய பாதுகாப்பு நிறுவனத்தால் முழுக்க முழுக்க உள் நாட்டில் தயாரிக்கப்பட்டது ஆகும்.
இது தொடர்பாக ஃபயர் பாயிண்ட் நிறுவனத்தின் CEO இரினா டெரெக் வழங்கிய தகவலில், உக்ரைனிடம் உள்ள ஏவுகணைகளிலேயே இது மிகவும் சக்தி வாய்ந்தது என தெரிவித்துள்ளார்.
மேலும் இதனை முதலில் பொதுவெளியில் அறிவிக்கும் திட்டமில்லை, ஆனால் இது தான் சரியான தருணம் என கருதி அறிவித்து இருப்பதாக இரினா டெரெக் பொலிட்டிகோ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த ஏவுகணை உருவாக்கமானது, அதன் யோசனையில் இருந்து 9 மாதங்களில் வெற்றிகரமான சோதனையுடன் முடிவடைந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
No comments: