News Just In

7/18/2025 04:22:00 PM

ஆறு நிமிடம் இருளில் மூழ்க உள்ள உலகின் பெரும்பகுதி - வர உள்ள அரிதான கிரகணம்

ஆறு  நிமிடம் இருளில் மூழ்க உள்ள உலகின் பெரும்பகுதி - வர உள்ள அரிதான கிரகணம்



சூரிய கிரகணத்தால், உலகின் பெரும்பகுதி இருளில் மூழ்க உள்ளது.
நூற்றாண்டின் கிரகணம்

சூரியன் - சந்திரன் - பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் போது சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாகத் தடுத்து, அந்த நேரத்தில் பூமியின் சில இடங்களில் நிழல் ஏற்படும்.
ஆனால் அடுத்து வர உள்ள கிரகணம் ஒன்று, உலகின் பெரும் பகுதியை இருளில் மூழ்கடிக்க உள்ளது.

பெரிய வட ஆப்பிரிக்க கிரகணம் அல்லது நூற்றாண்டின் கிரகணம் என அழைக்கப்படும் இந்த சூரிய கிரகணம் வரும் ஆகஸ்ட் 2, 2027 அன்று ஏற்பட உள்ளது.

6 நிமிடங்கள் 23 வினாடிகள் நீடிக்க உள்ள இந்த கிரகணம், வழக்கத்திற்கு மாறாக நீண்ட காலமாகும். பெரும்பாலான மொத்த கிரகணங்கள் 3 நிமிடங்களுக்குள் முடிந்துவிடும்.

இதற்கு முன்னர் 1991 ஆம் ஆண்டு நடைபெற்றது. மீண்டும் இந்த கிரகணம் 2114 ஆம் ஆண்டே நடைபெறும்.



அட்லாண்டிக் பெருங்கடலில் தொடங்கும் இந்த கிரகணம், 3 கண்டங்களை கடந்து, இந்தியப் பெருங்கடலில் மறைந்துவிடும். இந்த கிரகணத்தின் மொத்த பாதை 275 கிமீ அகலம் கொண்டது ஆகும்.

தெற்கு ஸ்பெயின், ஜிப்ரால்டர், மொராக்கோ, அல்ஜீரியா, துனிசியா, லிபியா, எகிப்து, சவுதி அரேபியா, ஏமன் மற்றும் சோமாலியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மில்லியன் கணக்கான மக்கள் இந்த கிரகணத்தை காண முடியும். ஆனால் இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது.

No comments: