கிருஷாந்தி குமாரசாமியின் படுகொலை விடயத்தில் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்பட்டது போல் செம்மணி மனித புதைகுழியுடன் தொடர்புடையவர்களை கண்டறிய சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரித்தானியாவின், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டேம் சியோபைன் மெக்டோனா கோரியுள்ளார்.
யாழ். செம்மணி மனித புதைகுழி தொடர்பில், லண்டனில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றின் கிளைக்கட்டிடத்தின் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்ட கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த அறிக்கையில், "ஒரு மனித புதைகுழி தோண்டுதல் பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் அனுபவித்த வலி மற்றும் மௌனத்தை எடுத்துக் காட்டுகின்றது. சர்வதேச சமூகம் இறுதியாக உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறது.
No comments: