News Just In

7/03/2025 12:39:00 PM

அதிர வைக்கும் செம்மணிபுதைகுழி மனித படுகொலை: தொடரும் பதற்றநிலை

அதிர வைக்கும் செம்மணிபுதைகுழி மனித படுகொலை: தொடரும் பதற்றநிலை


நாளுக்கு நாள் செம்மணியில் அகழ்ந்து எடுக்கப்படும் எலும்புக்கூடுகள் தமிழ் இனப்படுகொலை குறித்த பொறுப்புக்கூறலை மேலும் வலுவடைய செய்துள்ளது.

அதிலும் குறிப்பாக அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் புத்தப்பை மற்றும் நேற்றைய தினம் கண்டெடுக்கப்பட்ட விளையாட்டு பொம்மை மற்றும் சப்பாத்து என்பன மிகப்பெரிய சர்சையாய் வெடித்துள்ளது.

தீவிரவாதிகளை கொன்று புதைத்ததாகவும் நாட்டில் இடம்பெற்றது நீதிக்கான போர் என்றும் தெரிவித்த அரசாங்கம் அப்பாவி குழந்தைகளை ஈவிரக்கமின்றி கொன்று புதைத்திருப்பது ஆதாரத்துடன் தற்போது வெளிவந்துள்ளது.
ஆகையினால், எவ்வித காரணமும்இன்றிஇடம்பெற்றஇனப்படுகொலைக்கான நீதியை பெற்றுகொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ் மக்கள் உட்பட சர்வதேச அளவிலும் அரசுக்கு பாரிய அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது வரை அரசு தரப்பிலிருந்து முறையாக வாய்திறக்கப்படாமல் உள்ளது.

நாளுக்கு நாள் அகழ்வு நடவடிக்கைகளில் கண்டெடுக்கப்படும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் சார்பில் தொடர்ந்து அமைதி காப்பது மீண்டும் இந்த விகாரத்தை அரசாங்கம் திட்டமிட்டு மூடி மறைக்கின்றதா என்ற கேள்வியையும் எழுப்புவதாக உள்ளது.

No comments: