News Just In

7/17/2025 01:10:00 PM

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை விடுப்பு



அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

நேற்றையதினம் பகல் 12.37 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக நிலநடுக்கம் பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அலஸ்காவில் உள்ள சாண்ட் பாயிண்ட் தீவில் இருந்து 87 கிலோமீட்டர் தொலைவில் 20 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




இதன் விளைவாக, அலஸ்காவின் கடலோரப் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

No comments: