News Just In

7/13/2025 08:44:00 AM

ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் மீதான தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன் : முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ்.

ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் மீதான தாக்குதலை கடுமையாக கண்டிக்கிறேன் : முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ்.





ஊடகவியலாளரும், சமூக செயற்பாடாளருமான நூருல் ஹுதா உமர் நேற்றிரவு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்த தாக்குதல், ஊடகவியலாளர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை குறைக்கும் ஒரு முயற்சியாகும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அவரது அறிக்கையில் மேலும், ஊடகவியலாளர்களின் சுதந்திரத்திற்கு உரிமைக்கும் மீறலை தடுக்க, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

ஊடகவியலாளர்கள், சமூகத்தின் கண்காணிப்பாளர்களாக செயல்படுகிறார்கள். அவர்களுக்கு எதிரான தாக்குதல்கள், சமூகத்தின் சுதந்திரமான தகவல் பரிமாற்றத்தை பாதிக்கக்கூடும். எனவே, இந்த சம்பவம் மீது உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நிலைமையில், சமூகத்தின் ஒற்றுமையும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும் முக்கியமாகும். எனவே இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த பொலிசார் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் ஜனநாயக விரோதிகளின் வன்முறை போக்குகளுக்கு வெகுஜன தொடர்பு சுதந்திரம் இலக்காகுவதிலிருந்தும் விடுபட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

No comments: