News Just In

6/28/2025 05:35:00 PM

சிம்மம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள் முழுமையாக


சிம்மம் ராசியினருக்கான ஜூலை மாத பலன்கள்
 

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சூர்யன், குரு - அயன சயன போக ஸ்தானத்தில் புதன் - ராசியில் செவ்வாய், கேது - களத்திர ஸ்தானத்தில் சனி, ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள்.

கிரகமாற்றம்: 02.07.2025 அன்று களத்திர ஸ்தானத்தில் சனி வக்ரம் ஆரம்பிக்கிறார் | 03.07.2025 அன்று அயன சயன போக ஸ்தானத்தில் புதன் வக்ரம் ஆரம்பிக்கிறார் | 17.07.2025 அன்று லாப ஸ்தானத்தில் இருந்து சூரியன் அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 17.07.2025 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 26.07.2025 அன்று தொழில் ஸ்தானத்தில் இருந்து சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார் | 29.07.2025 அன்று ராசியில் இருந்து செவ்வாய் தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த மாதம் ராசிநாதன் சூரியன் அயன சயன போக விரைய ஸ்தானத்திற்கு மாத மத்தியில் வருகிறார். தொழில் நிமித்தமாக இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலை உருவாகும். உங்களின் தரத்தை விட தீயோரோடு சகவாசத்தை குறைக்க வேண்டும். எனினும் லாப ஸ்தானத்தில் இருக்கும் குரு சஞ்சாரத்தால் தெய்வ அனுகூலத்தால் விடுபட்டு முன்னேற்றம் வந்து சேரும்.

உறவினர்கள் வகையில் வீண் மனக் கசப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர்.

புதிய வியாபாரம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். அறிவைப் பயன்படுத்தி ஏற்றம் |காணலாம். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். புகழ் பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பர். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். பலருக்கு வெற்றி நிச்சயம்.

பொதுநல சேவகர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். அரசியல் வாதிகள் எதிர்பார்த்த பதவியை அடையலாம். அலைச்சல் இருக்கும். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். கணவர் மற்றும் அண்டை அயலாரின் அன்பும் பாசமும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

மகம்: இந்த மாதம் நன்மை தீமை பற்றிய கவலைப்படாமல் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வீர்கள். போட்டிகள் மறையும். திருமணம் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். குடும்பத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறையும். உங்களது வார்த்தைக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக் கசப்பு நீங்கும். பிள்ளைகள் உங்களது பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள்.

பூரம்: இந்த மாதம் கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பணவரத்து கூடும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். திறமையாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். சின்ன விஷயத்துக் கூட கோபம் வரலாம் நிதானமாக இருப்பது நன்மை தரும். வேற்று மொழி பேசும் நபரால் நன்மை உண்டாகும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த மாதம் புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பதுபடி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்கள் அதனால் அலைச்சல் ஏற்படலாம். வியாபார விரிவாக்கம் தொடர்பான பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும்.

No comments: