(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
பெண்கள், இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினையை இல்லாமலாக்கி பொருளாதாரத்தை உயர்த்தி வாழ்வாதாரத்தை சிறப்பாக்கும் நோக்கில் விற்பனை மேம்பாட்டுக்காக பயனாளிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி வைக்கப்ட்டுள்ளதாக சேர்க்கிள் (CIRCLE) எனப்படும் இளம் பெண்கள் அமைப்பின் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர் தெரிவித்தார்.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலும் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலும் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலும் சேர்க்கிள் நிறுவனத்தின் வாழி;வாதார உதவு ஊக்கத் திட்டங்கள் அமுலாக்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிறைந்துரைச்சேனைக் கிராமத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள், இளைஞர்கள், யுவதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட பரிந்துரை வலையமைப்பின் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்ட தையல் ஆடையுற்பத்தி விற்பனை நிலையத்துக்கு இரண்டு சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வவுணதீவு, கல்குடா நரிப்புல்தோட்டம் மகிழவெட்டுவான் ஆகிய கிராமங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள், இளைஞர்கள், யுவதிகளை உள்ளடக்கி அப்பிரதேச பரிந்துரை வலையமைப்பின் ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்ட கணனிப் பயிற்சி, காகிதாதிகள் விற்பனை, போட்டோ கொப்பி, பிரின்ரிங் உட்பட உள்ளுர் உற்பத்திப் பொருட்கள் விற்பனை நிலையம் ஆகியவற்றின் உற்பத்தித் திறன் மேம்பாட்டிற்காக ஒரு சைக்கிள் கையளிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு நிகழ்வுகளிலும் பிரதேசத்தின் பயனாளிகள் உட்பட
“பொன்” நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இவ்விரு இடங்களிலும் தலா ஐந்து இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த வாழ்வாதார உதவு ஊக்கத் திட்டங்கள் சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் அமைப்பின் ஊடாக அமுல்படுத்தப்படுகின்றன.
இந்த உதவு ஊக்கத் திட்டங்களுக்கு சைக்கிள்கள் கையளிக்கும் நிகழ்வுகளில் சேர்க்கிள் இளம் பெண்கள் அமைப்பின் வெளிக்கள இணைப்பாளர்களான கே. ஜெயவாணி, எம்.எல். மாஜிதா, கே. லக்ஷானா ஆகியோருட்பட பரிந்துரை வலையமைப்பிலுள்ள பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
No comments: