
கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் 'பிள்ளையான்' எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை 90 நாட்கள் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நபர் ஒருவர் கடத்தப்பட்டு காணாமல் போனமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே அவர் கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.
கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக பிள்ளையான் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது
No comments: