
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறியவுடன் தன்னையும், சிவனேசதுரை சந்திரகாந்தனையும் புறிந்துக்கொண்ட ஒரோயொருவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜகபக்ச என விநாயமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு விநாயமூர்த்தி முரளிதரன் மற்றும், சிவனேசதுரை சந்திரகாந்தன் இருவரும் வழங்கிய சிறப்பு நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் உயிர் நீத்தபிறகு அவரது உடலத்தை அடையாளப்படுத்த மகிந்த ராஜபக்சவிடம் இருந்து அழைப்பு கிடைத்தது.
உடலத்தை அடையாளப்படுத்தி தான் உறுதியளித்தால் மாத்திரமே அதை வெளியுலகுக்கு அறிவிக்க முடியும் என மகிந்த சுட்டிக்காட்டினார்.
நான் அடையாளப்படுத்தியவுடன் அங்கிருந்து சென்றுவிட்டேன்.
அதன்பின்னர் அவரது உடலம் தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது. அப்போது இராணுவ மேலாதிக்கம் காரணமாக அவற்றில் தலையிடுவதற்கான அதிகாரம் எமக்கு வழங்கப்படவில்லை.
மேலும், தன் மீது சர்வதேச தடை விதிக்கப்பட்டமையை மகிந்த ஏற்றுகொள்ள மறுப்பு தெரிவித்தார்.
அவ்வாறென்றால் முழு உலக நாடுகளிலும் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் தடை அறிவிக்கவேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அதேபோலவே பிரித்தானிய தடை தொடர்பில் நாமல் ராஜபக்சவும் வெளிப்படையாக பேசியிருந்தார்.
இந்த தடை ஏற்கத்தக்க ஒன்று அல்ல என சுட்டிக்காட்டினார்.
மேலும் பொறுப்புக்கூறல் விடயத்தில் தற்போதைய அரசாங்கம் தவறிழைத்ததன் காரணமாகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என கருதுகிறேன்
மேலும் ஜே.வி.பியினர் எப்போதும் தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே வெளிப்படுத்துவார்கள்.
உதாரணமாக இணைந்திருந்த வடக்கு கிழக்கை பிறத்தவர்களும் அவர்களே.
குறிப்பாக தற்போதைய அரசாங்கத்தில் பொறுப்புவாய்ந்த அமைச்சர் ஒருவர் கூறுகிறார், ஒரு தமிழ் அரசியல் கைதிகளை கூட நாங்கள் விடுவிக்கபோவதில்லை என்று.
மேலும், தமிழ் மக்கள் விடயத்தில் ஒதுங்கியிருக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர். மேலும் அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்க பின்வாங்குகின்றனர்” என்றார்.
No comments: