
பதுளை மாவட்டம் , ஹாலிஎல நகரில் அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்களின் சடலங்கள் இன்று (12) கண்டெடுக்கப்பட்டதாக ஹாலி எல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹாலிஎல நகரில் உள்ள டிப்போவிற்கு அருகிலுள்ள பள்ளத்தில் ஒரு ஆணின் சடலத்தையும்,
ஹாலிஎல ரயில் நிலையத்திற்குச் செல்லும் வழியில் ஒரு கோவிலுக்கு அருகிலுள்ள பாதையில் மற்றொரு உடலையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த இரண்டு இளைஞர்களின் உடல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை,
அவர்கள் தொலைதூரப் பகுதியில் கொலை செய்யப்பட்டு இந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டதா, அல்லது இங்கு கொலை செய்யப்பட்டார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
No comments: