News Just In

4/12/2025 08:21:00 AM

15 ஆம் திகதி அரச விடுமுறையில்லை!


15 ஆம் திகதி அரச விடுமுறையில்லை



எதிர்வரும் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமென வெளியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அடுத்த வாரம் பெரிய வௌ்ளியை முன்னிட்டு அந்த நாள் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

வேலை செய்வதற்கு 03 தினங்கள் மாத்திரமே உள்ளது என்பதால் 15 ஆம் திகதியை விடுமுறை தினமாக அறிவிப்பதற்கு இதுவரை தீர்மானிக்கப்பட்டவில்லை என பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன குறிப்பிட்டார்.

No comments: