News Just In

4/07/2025 10:11:00 AM

ஐபோன்களின் விலைகள் உயர்வடையும் வாய்ப்பு!

ஐபோன்களின் விலைகள் உயர்வடையும் வாய்ப்பு!



ஐபோன்களின் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  சீனா மீது 54% வரிகளை விதித்துள்ளார்.

இந்தநிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோனை சீனாவில் உற்பத்தி செய்கின்ற நிலையில் இந்த வரிவிதிப்பு தாக்கத்தை செலுத்தியுள்ளதால் விலை அதிகரிக்கக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி ஐபோனின் சமீபத்திய மொடலைத் தயாரிப்பதற்கான செலவு 580 அமெரிக்க டொலரில் இருந்து 850 அமெரிக்க டொலராக உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதனால், 256GB ஐபோன் 16 Proவின் விலை 1,100 அமெரிக்க டொலரிலிருந்து 3,500 அமெரிக்க டொலராக உயர வாய்ப்புள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

No comments: