News Just In

4/08/2025 05:29:00 PM

சபையில் திடீரென எழுந்த அர்ச்சுனா எம்.பி: இடைநிறுத்தப்பட்ட நேரடி ஒளிபரப்பு சேவை..!

சபையில் திடீரென எழுந்த அர்ச்சுனா எம்.பி: இடைநிறுத்தப்பட்ட நேரடி ஒளிபரப்பு சேவை..!




யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்றையதினம்(08) பாராளுமன்றில் உரையாற்றியபோது நேரடி ஒளிபரப்பு சேவை இடைநிறுத்தப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வெளியிடும் அறிக்கைகளை, காணொளி மற்றும் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்புவது இடைநிறுத்தப்படுவதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன கடந்த மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றில் அறிவித்தார்.

அதன்படி, எதிர்வரும் 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு சபாநாயகரினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றையதினம்(08) இடம்பெற்றுவரும் பாராளுமன்ற அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உரையாற்றும் போது,கௌரவ சபாநாயகர் அவர்களினால் மார்ச் 19, 2025 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ (டாக்டர்) இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பிறப்பித்த உத்தரவின் பேரில் நேரடி ஒளிபரப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு இடம்பெற்றிருந்ததுடன் அவர் உரையாற்றிய பின்னர் தொடர்ந்தும் ஒளிபரப்பு சேவை மீண்டும் இடம்பெற்று வருகி

No comments: