News Just In

4/20/2025 05:52:00 PM

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு



உயர்தரப் பரீட்சையின் முடிவுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஆரம்பத்தில் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முடிவுகள் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும், பல நடைமுறை சிக்கல்களே தாமதத்திற்குக் காரணம் என்று பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு மொத்தம் 333,185 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments: