News Just In

4/29/2025 12:02:00 PM

கனடா தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி

கனடா தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி! மீண்டும் பிரதமராகும் மார்க் கார்னி



கனடாவில் அண்மையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மீண்டும் ஆட்சியமைக்கும் லிபரல் கட்சி

கனடாவின் முன்னணி செய்தி நிறுவனமான சிபிசி வெளியிட்டுள்ள தகவலின்படி, லிபரல் கட்சி மொத்தமாக 144 இடங்களை வென்றுள்ளது.

மேலும் 21 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் தொடர்ந்து நான்காவது முறையாக லிபரல் கட்சி கனடாவில் ஆட்சியமைக்க உள்ளது.

எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி இதுவரை 121 இடங்களை வென்றுள்ளது.

மேலும் 26 இடங்களில் முன்னிலையில் உள்ளது.



சிபிசி வெளியிட்ட தகவலின்படி, லிபரல் கட்சி 43 சதவீத வாக்குகளையும் கன்சர்வேட்டிவ் கட்சி 41.7 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.

No comments: