News Just In

4/21/2025 05:43:00 AM

யாழில் பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

யாழில் பெருமளவான போதைப்பொருளுடன் இளைஞர் கைது!


சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் பகுதியில் நேற்றய தினம் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 1010 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டன.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் திரு.மயூரன் தலைமையிலான போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

சந்தேகநபர் தற்போது சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: