யூ.எஸ்.எப். ஸ்ரீலங்கா சமூக சேவை அமைப்பின் 2025 ஆண்டுக்கான வருடாந்த இப்தார் நிகழ்வு அமைப்பின் ஸ்தாபக தலைவரும், இளைஞர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், இளைஞர் சேவை அதிகாரியுமான அ. கபூர் அன்வர் தலைமையில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் சனிக்கிழமை கிழமை (22) மிக நடைபெற்றது.
இந்நிகழ்வில் நோன்பின் மாண்புகளை பற்றி மௌலவி எம்.ஐ. சஹ்பி (ஹாமி) மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார். இதன்போது, சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் எந்திரி எம்.எம். முனாஸ், மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் செயலாளர் ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர், ஜும்மா பள்ளிவாசல் மற்றும் பிரதேச பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள், சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி எம்.ரீ.எம். ஹாரூன், அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், பிரதேச சமூக நல அமைப்புக்களின் பிரதானிகள், விரிவுரையாளர்கள், யூ.எஸ்.எப். ஸ்ரீலங்கா சமூக சேவை அமைப்பின் ஆலோசகர்கள், யூ.எஸ்.எப். ஸ்ரீலங்கா சமூக சேவை அமைப்பின் முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் , யூ.எஸ்.எப். ஸ்ரீலங்கா சமூக சேவை அமைப்பின் செயற்பாட்டாளர்கள் , இளைஞர்கள் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்
No comments: