News Just In

3/09/2025 04:22:00 PM

தேசபந்துவின் கைதை தடுக்கும் ஜனாதிபதி அநுரவின் டீல் அம்பலம்!

தேசபந்துவின் கைதை தடுக்கும் ஜனாதிபதி அநுரவின் டீல் அம்பலம்



ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையிலான ஒப்பந்தமொன்று முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதை தடுப்பதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.

கொழும்பு - ஹோமகம பகுதியில் அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க டிரான் அலஸ் என்ன மோசடி செய்தாலும் அல்லது கொலை செய்தாலும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என அதன்போது அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ரணவக்க, தேசபந்து ஏன் கைது செய்யப்படவில்லை? டிரான் அலஸ் அவருக்குப் பின்னால் இருக்கிறார்.

டிரான் அலஸ் என்ன மோசடி செய்தாலும், கொலை செய்தாலும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் அநுர குமார எடுக்கமாட்டார்.அதுதான் அவரது ஒப்பந்தம்.” என்றார்.

இவ்வாறானதொரு பின்னணியில், முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை துப்பாக்கிச் சூட்டு சம்வம் ஒன்று தொடர்பில் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.



எனினும், குறித்த நீதிமன்ற உத்தரவின் பின்னர், தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியுள்ளதையடுத்து அவரை கைது செய்ய அண்மைய நாட்களாக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வந்த போதிலும் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.

இந்த நிலையில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் முன்னாள் அமைச்சர் டிரான் அலஸுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் காரணமாக தேசபந்து தென்னகோன் கைது செய்யப்படமாட்டார் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்

No comments: