முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு ஏற்படுமாயின் ஐக்கிய மக்கள் காங்கிரஸும் இணைவதற்கு தயாராக இருப்பதாக கட்சியின் செயலாளர் நாயகம் ஏ.சி. யஹ்யா கான் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தவிர்ந்த - ஏனைய அனைத்து முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் கூட்டமைப்பில் இணைவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள நாம் தயாராக உள்ளோம்.
முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு என்பது வரவேற்கத்தக்க ஒரு விடயம். இதை நாம் வரவேற்கிறோம். உள்ளூராட்சி தேர்தலுக்கு மட்டுமன்றி இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் இந்த கூட்டமைப்பு போட்டியிட வேண்டும்.
22 வருடங்களாக சண்முகத்தை ஏமாற்றி - அபிவிருத்திகள் எதையும் செய்யாது - எம்பிக்களை உருவாக்கும் தொழிற்சாலையாக செயல்படும் கட்சி எமக்கு இனியும் வேண்டாம்.
தேர்தல் நெருங்கும் இந்தத் தருணத்தில் பொய்களையும் ஏமாற்று கருத்துக்களையும் கொண்டு வரும் கட்சி தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் யஹ்யாகான் கேட்டுக் கொண்டுள்ளார்
No comments: