News Just In

3/13/2025 08:37:00 AM

கல்முனை கல்வி வலய வருடாந்த இப்தார் வைபகம் !

கல்முனை கல்வி வலய வருடாந்த இப்தார் வைபகம் !



நூருல் ஹுதா உமர்
கல்முனை வலயக்கல்வி பணிமனை உத்தியோகத்தர்கள், கல்முனை கல்வி வலய அதிபர்கள், உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற வருடாந்த இப்தார் வைபவம் கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் அவர்களின் தலைமையில் பணிமனை கேட்போர் கூடத்தில் இன்று (12) நடைபெற்றது.

இந்நிகழ்வின் ரமழான் சிந்தனையை கல்முனை நகர் ஜும்மா பள்ளிவாசல் பேஷ் இமாம் எம். எச். எம். இர்பாத் (ரஷா தி) நிகழ்த்தினார்.

மேலும் இந்நிகழ்வுக்கு கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார், மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹீர், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்சின் பக்கிர், கல்முனை பிரதேசத்தில் அமைந்துள்ள திணைக்கள தலைவர்கள், ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர்கள், இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள், கல்முனை கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அதிபர்கள், பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், பிரதேச முக்கியஸ்தர்கள், கல்விமான்கள் ஊர்ப்பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

No comments: